பிட்டு படங்களை அடித்து ஓட விட்ட "இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு" ! எப்படி இருக்கு? இதை சின்ன பசங்க படிக்காதீங்க...

By sathish k  |  First Published Dec 8, 2018, 6:35 PM IST

பிட்டு படங்களையே பின்னுக்குத்தள்ளி, டிசம்பர் குளிரில் நடுங்கும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து சூடேற்றி அனுப்பும் இந்த மனசு யாருக்கு வரும்? அப்படி கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கொடுத்து இருக்கும் படம் தான் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" ஆமாம் எப்படி இருக்கு?


தமிழ் சினிமாவுக்கு என்று பல ஸ்டைல் படங்கள் உண்டு ஒவ்வொரு காலத்துக்கு ஏற்ப ஒரு சீசன் படங்கள் வரும் காதல் குடும்பம் ஹாரர் திரில்லர் இப்படி வரும் சமீபத்தில் அடல்ட் காமெடி படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது அந்த வகையில் விமல் நடித்து வவேளிவந்து இருக்கும் படம் என்றால் அது இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் பார்க்க வரும் இளைஞர்களுக்கு செம மச்சம் அகம் மனம் குளிர ரசிப்பார்கள் காமெடி ஒரு பக்கம் அதே போல கிளுகிளுப்புக்க்கு பஞ்சம் இல்லாமல் கொடுத்து இருக்கும் படம்.

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடிக்க, அதே ஸ்டைலில் நாமும் ஒரு படத்தைக் கொடுத்து டிசம்பர் குளிரிலிருக்கும் ரசிகர்களைச் சூடேற்றுவோம் என முன்வந்திருக்கிறார் இயக்குநர்.

Tap to resize

Latest Videos

சரி வளவனு நேரத்தை கடத்தாம மேட்டருக்கு வருவோம் அதாங்க கதைக்கு... விமல் ‘அந்த’ விஷயத்தில் மச்சக்கார ஆசாமி. அழகான பெண்ணோ அம்சமான ஆன்டியோ எவர் கிடைத்தாலும் பவர் காட்டுகிறார். இவருக்கு ஒரு லவ்வர்; அவரும் இவரிடம் காட்டுக் காட்டென HOTடுகிறார்.  விமலும் சிங்கம்புலியும் தாங்கள் பார்க்கும் வேலையில் சம்பளம் பத்தவில்லை என்பதால் சோப்பு, சீப்பு, கண்ணாடி, காண்டம் என கண்டதையும் களவாண்டு பிழைப்பை ஓட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஊர் இன்ஸ்பெக்டரின் பெரிய வீட்டிலிருந்து ஐந்து லட்சம், சின்ன வீட்டிலிருந்து ஐந்து லட்சம் என கனமாக கைவைத்து கண்டத்தில் சிக்குகிறார்கள். இவர்களை சப் இன்ஸ்பெக்டர் பூர்ணா துரத்தித் துரத்தி வெளுக்கிறார். இது கதையின் இன்னொரு டிராக்.

விமல் லண்டனில் வேலைக்குப் போகிறார். அந்த ஊரில் ஒரு மாடர்ன் மங்காத்தா விமலின் ஆண்மையை யானை பலத்தோடு சுருட்டிச் சுவைத்து சக்கையாய் பிழிகிறது. ‘ஆழம் பாத்தது போதும், யப்பா சாமி ஆளைவிடு’ என நம்மூருக்கு ஓடிவருகிற விமலை துரத்திக் கொண்டே வருகிறது அந்த லண்டன் லட்டு. கதையில் இதுவும் ஒரு டிராக்.

விமலும் சிங்கம் புலியும் எதையெதையோ திருடியதில் அந்த ஊரின் பெரிய தாதா ஆனந்த்ராஜின் ஒரு கோடி மதிப்புள்ள போதைப் பொருள் ஒன்று அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் கைக்கு வந்து சேர்கிறது. அதை கைப்பற்ற ஆனந்த்ராஜ் அன்ட் கோ வெறியாய்த் துரத்துவது கதையின் மற்றொரு டிராக்.

இத்தனை கதையிருந்தும் படம் பார்த்து முடித்தபின் ‘படத்துல கதையே இல்லையே’ என்ற ஃபீலிங் வருகிற அளவுக்கு திரைக்கதை அமைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்! ஆஷ்னா சவேரியுடனாக காதல் சவாரியும் அந்த ஒற்றைப் பாட்டும் அநியாயத்துக்கு அசைவம்!

ஆஷ்னா சவேரி இந்தப் படத்தில் ரிப்பன் அளவில் உடையுடுத்திய வெப்பன். அவரது நடிப்பு இளசுகளின் ஹார்மோனை சூடேற்றாமல் விடாது! சப் இன்ஸ்பெக்டராக பூர்ணா. அந்த கதாபாத்திரத்துக்கு அவரது கிராப் கட்டிங் ஹேர் ஸ்டைல் கம்பீரம் தந்திருக்கிறது.

தமிழ் பேசுகிற லண்டன் பெண்ணாக மியா ராய். இவர் சன்னி லியோனின் போட்டிக்கு தமிழில் களம் இறங்கி இருக்கிறார்.அதை நிரூபிக்கும்படியும் நடித்திருக்கிறார். அவருக்கான சண்டைக் காட்சியில் ‘அட’ போடவும் வைக்கிறார். கிளாமர், ஹியூமர் விரும்பிகளுக்கு இந்த படம் அமர்க்களமான விருந்து.

click me!