
'மாஸ்டர்' படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் உறவினரான பிரிட்டோ, விஜய்யை வைத்து எடுத்த மாஸ்டர் படம் தான் இந்த ஆண்டில் அதிக வசூலை பெற்ற முதல் படமாக இருந்து வருகிறது. பிரிட்டோ, மாஸ்டர் படத்தை தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.
சினிமாக்கள் தயாரிப்பதுடன் பிரிட்டோவிற்கு சொந்தமாக ஒரு கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது. இவர் தற்போது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி தருவதற்காக மற்றொரு பள்ளிக் கூடத்தை கட்டி வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த பள்ளிக் கூடத்தை விஜய் சுற்றி பார்க்க சென்றதால், இந்த பள்ளியை விஜய் தான் கட்டி வருவதாக கூட வதந்தி பரவியது.
இந்நிலையில் பிரிட்டோவுக்கு சொந்தமான ஷியோமி நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதியை கையாள்வதில்(logistics) பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
இவரின் மகள் சினேகாவை முன்னணி இயக்குனராக்க நினைந்த பிரிட்டோ.. விஜயகாந்தின் திரை வாழ்கையை மாற்றிய எஸ்.ஏ.சி இயக்கிய படமான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இரண்டாம் பக்கத்தை மக்களை வைத்து உருவாக்கினார் . இந்த படத்திற்கான கதையை விஜயின் தந்தை யும் முதல் பாகத்தை உருவாக்கியவருமான எஸ்.ஏ.சந்திரசேகரே எழுதியிருந்தார். இந்த படத்தை இயக்கும் போது சினேகாவுக்கு வெறும் 18 வயது மட்டுமே ஆகியிருந்தது. அன்று இளம் இயக்குனர் என அவர் பிரபலமானார். இவருக்கு உதவ முன்னனி இயக்குனர்களிடம் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் இறக்கப்பட்டனர் என்பது பலரும் அறியாத உண்மை.
பின்னர் FUTSAL என்னும் உள் அரங்கு கால்பந்து விளையாட்டை நடத்தினார். முன்னணி கால்பந்து வீரர்களை இறக்கியும் இந்த போட்டி பிரிட்டோவுக்கு படு நஷ்டத்தை கொடுத்தது. இதைதொடர்ந்தே பிரிட்டோ விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்திருந்தார். இந்த பட விழாவில் பேசிய தயரிப்பாளர் பிரிட்டோ...விஜய் தனது தொழில் நஷ்டத்தை போக்கவே மாஸ்டர் படத்தில் நடித்ததாக கூறியிருந்தார்.
தொழிலில் நஷ்டத்தை சந்தித்த பிரிட்டோ எவ்வாறு கோடிக்கணக்கில் பணம் போட்டு முன்னணி நடிகரான விஜயின் படத்தை தயாரிக்க முடியும்.. எங்கிருந்து பணம் வந்தது என பல கேள்விகள் அப்போது எழுந்தது. அதோடு விஜயின் முந்தைய படங்களான செந்தூரப்பாண்டி, ரசிகன் உள்ளிட்ட படங்களை தான் தயாரித்ததாக பிரிட்டோ கூறியிருந்தார். ஆனால் இந்த படங்களின் தயரிப்பாளர்களாக விமல் மற்றும் B. V. Combines என குறிப்பிடப்பட்டிருப்பது பிரிட்டோவின் பினாமி பெயரில் இது உருவானதாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விஜய் மீது லஞ்ச ஒழிப்புத்திரை விசாரணை நடந்தபோது அதிகாரிகள் பிரிட்டோவிடமும் விசாரணை செய்தனர். அப்போது பிரிட்டோ விஜயின் பினாமி என்பதை மறுத்திருந்தார். இவ்வாறு உறவினர்களான விஜய் - பிரிட்டோ குடும்பத்தினர் ஒரு பிரச்சனை என்றால் ஒருவருக்கு ஒருவர் துணையா நின்று வருவதே பல கேள்விகளை எழுப்புகிறது.
மாஸ்டர் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு தனியார் நிறுவனம் மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது பதிப்புரிமைச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி FIR பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.