
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் போடப்பட்ட, 144 தடையால் ஒட்டு மொத்தமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில் செய்து வருபவர்கள், கடை உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், என அனைவரும் தங்களுடைய வேலையை சில தினங்களுக்கு ஓரம்கட்டி வைத்து விட்டு, வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
அதே போல் மற்றொரு புறம், திரையுலகை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெப்சி அமைப்பின் கீழ் வேலை செய்து வருபவர்களுக்கு, முன்னணி நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.
மேலும் தற்போது நடிகர் சங்கத்தில் தேர்தல் விஷயமாக ஒரு சில பிரச்சனைகள் நீடித்து வருவதால், தனி அதிகாரி கையில் நடிகர் சங்கம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே பெரிதாக நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களை யாரும் கண்டுகொள்ள வில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே நடிகர் சங்கத்திற்காக ரூ.10 லட்சம் கொடுத்து உதவிய, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இப்போது தன்னுடைய சார்பில் 500 நலிந்த கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வழங்கியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.