
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்த நிலையில் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை நடித்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் நடித்துள்ள இப்படத்திற்கு அவர் எவ்வளவு ரூபாய் சம்பளம் வாங்கினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதைக்கேட்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் என அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார் அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் செங்கம்பட்டி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பிரதமர் மோடி மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்தார். தற்போதைய தமிழக பாஜக மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். வந்த ஓராண்டிலேயே தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக அரசியல் வாதியாக உருவெடுத்துள்ளார். புள்ளி விவரங்களுடன் எதையும் துள்ளியமாக கூறும் அவரது பேச்சு, நிதானமான அணுகுமுறை பலரையும் ஈர்த்து வருகிறது.
அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் இளைஞர்கள் பலர் அக்காட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அண்ணாமலை திரைப்பட நடிகராகவும் களமிறங்கியுள்ளார். அதாவது சென்னையை மையமாக வைத்து பல புது இயக்குனர்கள் திரைப்படம் எடுத்து வருகின்றனர். அப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. அந்தவகையில் கன்னட மொழியில் உருவாகிவரும் அரபி என்ற படத்தில் அண்ணாமலை நடித்துள்ளார். தன் இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஷ்வாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்தான் அரபி, இப்படத்தை கன்னட இயக்குனர் ராஜ்குமார் என்பவர் இயக்குகிறார். ராகவேந்திரா புரடக்சன் இப் படத்தை தயாரிக்கிறது.
அதில் பாஜக மாநிலத் தலைவர் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நீச்சல் வீரர் விஷ்வாவின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் அண்ணாமலையை அணுகியபோது கதை பிடித்துப் போனதன் காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டார் அண்ணாமலை, இப்படத்திற்கு சம்மதம் தெரிவித்ததுடன் இப்படத்திற்கு சம்பளமாக ஒரே 1 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு நடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரபி படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக டீசர் வெளியீடு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டீசர் வெளியீட்டு மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. புதியதாக நடிக்க வருபவர்களே பல லட்சங்களில் ஊதியம் வாங்கும் நிலையில் அண்ணாமலை இப்படத்திற்கு ஒரு ரூபாய் மட்டும் ஊதியும் பெற்றிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.