பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை இவரா?... வைரலாகும் போட்டோ....!

By Kanimozhi Pannerselvam  |  First Published Feb 9, 2020, 5:50 PM IST

மிகப்பெரிய கலைக்குடும்ப பின்னணியைக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 


சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

Tap to resize

Latest Videos

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற  அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பமே சினிமாத்துறையை சேர்ந்ததுதான். அவரது அப்பா ராஜேஷ், தெலுங்கில் பிரபல நடிகர் ஆவார். இதுவரை 50க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளாராம். இவர் நடிப்பில் 1983ம் ஆண்டு வெளியான ஆனந்த பைரவி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டாவும் ஒரு நடிகர்தான். இவர் அழகு சீரியலில் பூரணாவின் கணவராக மகேஷ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மணிகண்டா இதுவரை 150க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மிகப்பெரிய கலைக்குடும்ப பின்னணியைக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ.... 

click me!