KamalHaasan: நடிகர் கமல்ஹாசனுக்கு வந்தது ‘ஓமைக்ரான்’ வகை கொரோனா பாதிப்பா?

By Ganesh PerumalFirst Published Nov 27, 2021, 9:52 PM IST
Highlights

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய புதிய வகை கொரோனா வைரஸான ‘ஓமைக்ரான்’ பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து திரும்பியதும் லேசான இருமல் இருந்ததை அடுத்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கமலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமலுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக நடிகர் கமல்ஹாசன் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து காணொலி வாயிலாக தோன்றிய கமல், தான் கொரோனாவில் இருந்து மீளும் வரை தனக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என அறிவித்தார்.

இதனிடையே கமலுக்கு வந்துள்ளது புதிய வகை கொரோனா தொற்றா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் இதனை மருத்துவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளில் மட்டுமே இதுவரை பரவி உள்ளது. நடிகர் கமல்ஹாசனோ, அமெரிக்காவில் இருந்து வந்துள்ளதால், அவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. 

click me!