காலையில் காதலுனுடன்... மாலையில் விஜயுடன்... ஜோடி போட்டு அதகளப்படுத்தும் நயன்தாரா..!

Published : Sep 18, 2019, 02:56 PM IST
காலையில் காதலுனுடன்... மாலையில் விஜயுடன்... ஜோடி போட்டு அதகளப்படுத்தும் நயன்தாரா..!

சுருக்கம்

நயன்தாராவை நான்கு நாட்களுக்கு ஒரு காதலனுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் கிளப்பப்பட்டு வந்தாலும் விக்னேஷ் சிவனை இனி அவர் விட்டு விலகுவதாய் இல்லை. 

நயன்தாராவை நான்கு நாட்களுக்கு ஒரு காதலனுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் கிளப்பப்பட்டு வந்தாலும் விக்னேஷ் சிவனை இனி அவர் விட்டு விலகுவதாய் இல்லை. இந்த நிலையில் தான் காலையில் காதலனுடனும் மாலையில் விஜயுடன் சேர்ந்து அதகளப்படுத்தி வருகிறார் நயன்தாரா.

இன்று தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை அவருடன் இருந்து உற்சாகமாக கொண்டாடினார் நயன்தாரா. அந்த வகையில் இந்த ஆண்டும் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பான ஆண்டு. ஆம் இயக்குநராக இருந்து வந்த சிவனை நெற்றிக்கண் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறார் நயன். 

அந்த உற்சாகத்தில் விக்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நயன் ‘என் அன்பான தயாரிப்பாளருக்கு’என வாழ்த்தியுள்ளார். இன்று காலை விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வந்தது. #HBDVigneshShivN என்கிற ஹேஸ்டேக் முதலிடத்தில் இருந்தது. 

இந்நிலையில் நயன்தாரா விஜயுடன் நடித்துள்ள பிகில் படத்தின் உனக்காக சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.  இப்போது விஜயுடன் நயன்தாரா ஜோடியாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ஆக மொத்தத்தில் இன்று காலை காதலன் விக்னேஷுடனும் மாலையில் விஜயுடனும் இணைந்து சமூக வலைதளங்களில் உலா வருகிறார் நயன்தாரா..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!