நயன்தாராவால் விழி பிதுங்கி நிற்கும் “இமைக்கா நொடிகள்” டீம்…

 
Published : Aug 22, 2017, 09:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
நயன்தாராவால் விழி பிதுங்கி நிற்கும் “இமைக்கா நொடிகள்” டீம்…

சுருக்கம்

imaikka nodikal team will upset by Nayantara

லீடு ரோல்களில் நடிக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதால் “இமைக்கா நொடிகள்” படத்தின் படப்பிடிப்பு நடிகை நயன்தாராவால் தாமதமாகி வருகிறதாம்.

நடிகை நயன்தாரா ஒரே நேரத்தில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்காலம்’, ‘வேலைக்காரன்’ என பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நயன்.

அதர்வாவுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு எப்போதோ முடிய வேண்டியது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு முடியாமல் இழுத்தடித்துக் கொண்டே போகிறதாம். இந்த தாமதத்திற்கு காரணம் நயன்தாராதானாம்.

‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு பிறகு அவர் லீடு ரோலில் நடிக்க கமிட்டான ‘அறம்’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா, அதையடுத்து ‘வேலைக்காரன்’ படத்திற்கும் கால்சீட் கொடுத்து விட்டாராம்.

இதனால் ‘இமைக்கா நொடிகளில்’ நயன்தாரா சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.

அந்த வகையில், இன்னும் 15 நாட்களுக்கு நயன்தாரா ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்தால்தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்க முடியும் என்பதால் நயன்தாராவின் கால்சீட்டுக்காக படக்குழு காத்துக்கிடக்கின்றனராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?