ஏ.ஆர். ரகுமானிடம் சட்டென்று கோபப்பட்ட இளையராஜா... ரசிகர்கள் அதிர்ச்சி... அரங்கமே அதிர்ந்த சம்பவம்!!

Published : Feb 04, 2019, 08:20 PM IST
ஏ.ஆர். ரகுமானிடம் சட்டென்று கோபப்பட்ட இளையராஜா... ரசிகர்கள் அதிர்ச்சி...  அரங்கமே அதிர்ந்த சம்பவம்!!

சுருக்கம்

தயாரிப்பாளர் சங்கம் நடத்திய இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தான் எத்தனை எதிர்ப்பு பல சோதனைகள் பாதி தயாரிப்பாளர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கோர்ட் கேஸ் என்று எல்லாம் சென்று ஒரு வழியாக இதை நடிகர் சங்க உறப்பினர்கள் ஒத்துழைப்புடன் வெற்றிகண்டார் விஷால் .

இளையராஜா 75 நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் கலந்து கொண்ட போதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தது தான் சிறப்பு. அதிலும் மேடையில் இசைஞானி இளையராஜாவும், ஆஸ்கர் நாயகன்ஏ.ஆர்.ரஹ்மானும்  பாடியது ரசிகர்களால் மறக்கவே முடியாத அனுபவமாக இருந்தது.

விழா மேடையில், இளையராஜா ரஹ்மான் பற்றி பேசியது எல்லாம் இனி பல காலம் பேசப்படும். ஆமாம், நீங்கள்  சின்னப் பையனாக பார்த்த ரஹ்மான் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று சுஹாசினி மணிரத்னம் இளையராஜாவிடம் கேட்க, அதற்கு இளையராஜா... ரஹ்மான் அவரின் அப்பாவுடன் இருந்ததை விட என்னுடன் தான் அதிக நேரம் இருந்திருக்கிறார் என்றார் இளையராஜா.

அப்பாவை விட என்னுடன் தானே அதிக நேரம் இருந்திருக்க என்று இளையராஜா ரஹ்மானை பார்த்து கேட்க, அவரும் ஆமாம் சார் என்றார். சட்டென்று கோபப்பட்ட இளையராஜா, இதை எல்லாம் நீ சொல்லணும் ஆனால், நீ சொல்ல வேண்டியதை எல்லாம் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று இளையராஜா கூற அரங்கில் இருந்தவர்கள் கை தட்டினார்கள்.

இந்த இசை விழா மேடையில் விழா நாயகன் இளையராஜா செல்லக் கோபம் கொண்டதை பார்த்த ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு ஒரே மகிழ்ச்சி. குரு தன் மீது உரிமையுடன் கேள்வி கேட்பதும், திட்டுவதும் என அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது  அவர் முகத்தில் தெரிந்தது.

இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் மேடையில் பேசிக் கொண்டதையும், இளையராஜா கோபப்பட்டு திட்டியதுமாக, இசைப்புயல் திட்டு வாங்கியதையும் பார்த்து  ரசித்தவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல சினிமா நட்சத்திரங்களும் தான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!