Ilaiyaraaja: “என் மெட்டுக்கு பாட்டெழுதுங்க ரசிகர்களே!!” டுவிட்டரை தெறிக்கவிடும் இளையராஜா

Ganesh A   | Asianet News
Published : Nov 27, 2021, 03:24 PM IST
Ilaiyaraaja: “என் மெட்டுக்கு பாட்டெழுதுங்க ரசிகர்களே!!” டுவிட்டரை தெறிக்கவிடும் இளையராஜா

சுருக்கம்

அழகான மெட்டு ஒன்றை அமைத்து, அதற்காக பாட்டெழுதும் பொன்னான வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார் இளையராஜா. மேலும் அந்த மெட்டுக்கான சூழலையும் அவர் விவரித்துள்ளார். 

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 

இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா சமீப காலமாக டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதன் வாயிலாக ரசிகர்களுக்கு தற்போது புதிய வாய்ப்பு ஒன்றை வழங்கி உள்ளார் இளையராஜா.

அதன்படி அழகான மெட்டு ஒன்றை அமைத்து, அதற்காக பாட்டெழுதும் பொன்னான வாய்ப்பை ரசிகர்களுக்கு அவர் வழங்கி இருக்கிறார். மேலும் அந்த மெட்டுக்கான சூழலையும் அவர் விவரித்துள்ளார். 

அதன்படி ‘ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனை சந்திக்க  செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மனநிலையை கொண்டு பாடல் வரிகளை எழுதுமாறு’ இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பாடலை அவர் ஏதேனும் படத்துக்கு பயன்படுத்தப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

HBD Rajinikanth : கோலிவுட்டின் ‘பவர்ஹவுஸ்’... இந்திய சினிமாவின் ராஜாதி ராஜா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!
மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!