கொரோனா போராளிகளுக்காக ஒன்றிணைந்த இளையராஜா - எஸ்.பி.பி... தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்கிய இசை ஜாம்பவான்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 31, 2020, 12:00 PM IST
Highlights

 அந்த  வகையில் இசைஞானி இளையராஜா அவர்கள் தானே எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 8 ஆயிரத்து 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்ததால், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: 

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பிரச்சனையை தீர்ப்பதற்காக பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் தங்களது உயிரையும் பணயம் வைத்து கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

இதற்கு முன்னதாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்,  போலீசாருக்கு முப்படை சார்பில் போர் விமானங்களின் அணிவகுப்பு, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவுதல், போர் கப்பல்களில் சைரன் ஒலிக்க  செய்தல் மூலமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. இரவு பகல் பாராமல் உழைக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மார்ச் 22ம் தேதி மாலை 5 மணிக்கு 5 நிமிடம் கை தட்டி ஒலி எழுப்ப வேண்டுமென பிரதமர் மோடி அவர்கள் கோரிக்கைவிடுத்தார். அதன்படி நாட்டு மக்களும் தங்களது வீட்டு வாசலில் நின்ற படி கை தட்டியும், மணியோசை எழுப்பியும் மரியாதை செலுத்தினர். 

இதையும் படிங்க: 

மேலும் பிரபலங்கள் பலரும் தங்களது உதவிகள் மூலம் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த  வகையில் இசைஞானி இளையராஜா அவர்கள் தானே எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். “பாரத பூமி இது புண்ணிய பூமி” என தொடங்கும் அந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இந்த பாடலில் லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு வாசித்துள்ளார். கொரோனா வாரியர்ஸான மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி செலுத்தும் விதமாக வெளியாகியுள்ள இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!