நிர்வாணமாக நிற்க வைக்கிறேன்... வேடிக்கையாக பார்க்கிறீர்களா? ஷாருக்கானின் அடாவடிகள்..!

By Thiraviaraj RMFirst Published Oct 20, 2021, 1:02 PM IST
Highlights

"நான் உங்கள் ஆடைகளை கழற்றி, என் முன்னால் நிர்வாணமாக நிற்க வைக்கிறேன். நீங்கள் அதை வேடிக்கையாக பார்க்கிறீர்களா?" 

போதைப்பொருள் வைத்திருந்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆர்யன் கான். இந்தப் பிரச்னையை தவிர்க்க விரும்பினாலும் சர்ச்சைகளுக்கு அந்நியர் அல்ல ஷாருக்கான். முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்

1992 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றன ஷாருக்கான் மீதான சர்ச்சைகள். அப்போது அவர் மும்பையில் நட்சத்திர விடுதியில் இருந்தபோது நடந்த சம்பவம் அது. அந்த ஆண்டு, ஷாருக்கான் ஒரு சினிமா பத்திரிகையாளருடன் சண்டையிட்டார். அவரது கோபத்திற்கு இலக்காக இருந்த பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஷாருக்கான் கைது செய்யப்பட்டார்.

அனுபமா சோப்ரா தனது எஸ்ஆர்கே பற்றிய புத்தகத்தில் தெரிவித்த ஒரு சம்பவத்தில், அப்போதைய இளம் நடிகர் தீபா சாஹி மற்றும் கேதன் மேத்தாவின் புகழ்பெற்ற படத்திற்காக ஒரு நெருங்கிய காட்சியைப் பற்றி பத்திரிகையாளர் எழுதியதால் வருத்தப்பட்டார்.
        
"நான் உங்கள் ஆடைகளை கழற்றி, என் முன்னால் நிர்வாணமாக நிற்க வைக்கிறேன். நீங்கள் அதை வேடிக்கையாக பார்க்கிறீர்களா?" எஸ்ஆர்கே, தனது லெட்டர்மேன் பேட்டியில், பத்திரிகையாளரிடம் கூறியதை நினைவு கூர்ந்தார்.  இடைப்பட்ட ஆண்டுகளில், ஷாருக்கான் ஒரு பொது நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அமர் சிங்கை சுட்டிக்காட்டி, 'தரிந்தகியை'(தீய நோக்கம் ) அவரது கண்களில் பார்க்க முடியும் எனக்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது சமாஜ்வாடி கட்சியின் செல்வாக்கு மிக்க பொதுச் செயலாளராக  அமர்சிங் அமிதாப் பச்சனுடன் நெருக்கமாக இருந்தார். இதனை அமிர்தாப் பச்சன் வெளிப்படையாகவே தட்டிக் கேட்டார். சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் ஷாருக்கான் வீடு முன் குவிந்தனர். 

இதனைக் கண்டு ஷாருக்கான் மகள் சுஹானா, அந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தார். பயத்தில் அழுது விட்டார். இது ஷாருக்கை மிகவும் வருத்தப்படுத்தியது. இது குறித்து பின்னர் பேசிய ஷாருக்கான், "நான் ஒரு பதான், நான் என் குடும்பத்தைப் பற்றி மிக மிக மிக மிக பாதுகாப்புடன் இருக்க விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார். 

2012 இல், ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய பிறகு, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு பாதுகாவலருடன் குடிபோதையில் இருந்த எஸ்ஆர்கே கைகலப்பில் ஈடுபட்டார். தனது பாதுகாப்பில், சுஹானாவை மைதானத்தில் கொண்டாட்டங்களில் சேராமல் தடுத்தார். ஆனால் பின்னர் அவர் தன்னைச் சுற்றியுள்ள தொலைக்காட்சி கேமராக்களின் முன்னால், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் (MCA) காவலாளி மற்றும் அதிகாரிகளை வார்த்தைகளால் திட்டினார்.

குழந்தைகள் முன்னிலையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ஷாருக்கை சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். மும்பை காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. MCA மைதானத்திற்குள் நுழைய தடை விதித்தது. ஆனால் ஆறு வருடங்களுக்குப் பிறகு,ஷாருக்கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் போலீசார் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. 

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே, எஸ்ஆர்கே 2010 ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கக் கூடாது என்று சிவசேனா தனக்கு அழுத்தம் கொடுத்தது "அவமானம்" என்று அவர் கூறினார். பாகிஸ்தானியர்கள், உலகின் சிறந்த டி 20 வீரர்கள் என்று அவர் கூறினார்.

மறைந்த பால்தாக்கரே, சிவசேனா தலைவர் மற்றும் தற்போதைய மகாராஷ்டிரா முதல்வரான உத்தவ் தாக்கரே ஆகியோர் ஷாருக்கான் நடித்த'மை நேம் இஸ் கான்' திரையிடப்படுவதைத் தடுத்தனர்.'மை நேம் இஸ் கான்' என்ற தலைப்பில், முஸ்லீம் பெயர் இருந்ததே அதற்கு காரணம். 

மும்பையின் லேண்ட்ஸ் எண்டிலிருந்து அரேபியக் கடலை ஒட்டி ஷாருக்கானின் ஆறு மாடி பங்களா பாரம்பரியச் சட்டங்கள் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. 

மும்பையின் பணக்காரர் மற்றும் புகழ்பெற்ற முகவரியான அலிபாகில் உள்ள அவரது கடற்கரை வீட்டின் முகப்பு கூட சர்ச்சையில் சிக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில், இது குறித்து வருமான வரித் துறை வழக்கு தொடுத்தது. ஆனால் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் நடவடிக்கை கைவிடப்பட்டது. ஷாருக்கானின் மாமியார் மற்றும் மைத்துனியின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட நிலத்தை வாங்கிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 

click me!