
மாரடைப்பு என்பது, தற்போது வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்க கூடிய ஒன்று. நம்முடைய உணவு முறை, பழக்க வழக்கம், ஸ்ட்ரெஸ், உள்ளிட்டவையே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆனால் திடீர் என ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவரை எப்படி காப்பாற்றுவது என்பதும் , மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்பது குறித்தும் பலருக்கு தெரிவது இல்லை.
இப்படி மாரடைப்பு ஏற்படுபவருக்கு கொடுக்கும் முதலுதவி சிகிச்சையை தான், 'CPR என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர் உயிர்க்காக்கும் முதலுதவி, "Life saving CPR" என்ற பெயரில் கவின் ஆண்டனி இயக்கத்தில் ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். இந்த விழிப்புணர்வு படம் குறித்து நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் பேசியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.