"கமலுக்கு கட்சி நடத்த எங்கிருந்து காசு வருது?"... ப்ரஸ் மீட்டில் சபாஷ் கேள்வி... அதற்கு கமலின் ' 'நச் ' பதில் இதுதான்....!

By Selvanayagam PFirst Published Nov 2, 2019, 10:57 PM IST
Highlights

கடந்த 1960ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர் கமல்ஹாசன். 
 

கடந்த 1960ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர் கமல்ஹாசன். 

அதன் பின்னர், ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து, தற்போது உலக நாயகனாக உச்சம் தொட்டுள்ளார். நடிகர், 

இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. அவரது 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாட நடிகர் சங்கம் மறந்தாலும், அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். 

ஒருபக்கம் திரைத்துறையில் கவனம் செலுத்தினாலும், மறுபக்கம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கிய அரசியலிலும் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல்முறையாக களம் கண்ட அவரது கட்சி, தனித்து நின்று பல இடங்களில் 3-வது இடத்தைப் பிடித்து முன்னணி அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது. 

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையான விகடன் சார்பில், உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்கும் விகடன் ப்ரஸ்மீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற அவர், தனது வாழ்க்கை மற்றும் திரைப்பயணம், ரஜினிகாந்துடனான நட்பு மற்றும் அரசியல் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அதில் ஒருவர், கமல்ஹாசனுக்கு கட்சி நடத்த எங்கிருந்து காசு வருகிறது? என கேள்வி கேட்டார். அதற்கு, கமல்ஹாசன்  சற்றும் யோசிக்காமல் "என் பாக்கெட்டிலிருந்துதான் வருகிறது" என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "என் கட்சியில் பல பேர், அவரவர் பாக்கெட்டுகளில் இருந்து பணம் போட்டுதான் கட்சியை நடத்திக்கிட்டு இருக்கோம். இதுல ஒரு பெரிய மேஜிக்கெல்லாம் இல்லை. 

மற்றவங்க சொல்ற மாதிரி, பணம் அங்கிருந்து வருகிறது, இங்கிருந்து வருகிறது என புரளி பரப்பிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் செய்திருக்கும் செலவுகள் தேர்தல் ஆணையத்துக்கு எப்படியும் தெரியும். எங்களுக்கு கிடைத்த வெற்றியும், நாங்கள் செய்த செலவும், நான் சொல்றது நிஜ செலவும் மூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்த பணக்குவியல்கள் அல்ல" என தெரிவித்தார்.

click me!