பாவனாவை திட்டம் தீட்டி பழி தீர்த்த நடிகர் திலீப்…பொறி வைத்துப் பிடித்த போலீஸ்….

Asianet News Tamil  
Published : Jul 13, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
பாவனாவை திட்டம் தீட்டி பழி தீர்த்த நடிகர் திலீப்…பொறி வைத்துப் பிடித்த போலீஸ்….

சுருக்கம்

how kerala police arrest dilip in bavana case

நடிகை பாவானாவை பழி தீர்க்க அவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதில் இருந்தது இன்று நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது வரை, கேரள போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் பகீர் ரகம்…

மம்முட்டி, மோகன் லாலுக்கு அடுத்தபடியாக கேரள சினிமா உலகின் மெகா ஸ்டாராக இருந்தவர்தான் இந்த திலீப். அவரது  நகைச்சுவை கலந்த ஹீராயிசம் மூலம் மலையாள திரை ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் பாவானா விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டதும் ஒரே நாளில் கேரள சினிமா ரசிகர்களின் வில்லனாகிப் போனார்…

இந்த வழக்கை கையிலெடுத்த போலீசார், டிஜிபி லோக்நாத்தின் நேரடி கண்காணிப்பில் ஐஜி தினேந்திர காஷ்யப், ஏடிஜிபி சந்தியா ஆகியோர் தலைமையில் தீவிரமாக களமிரங்கியது..

திலீப்பிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு ஒரு சில கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு அவரை விட்டுப்பிடித்தனர். ஆனால் திலீப்புக்குத் தெரியாமலேயே அவருக்கு எதிராக கனத்த வலையை வீசி தற்போது அசைக்க முடியாக ஆதாரங்களுடன் அவரை கைது செய்துள்ளனர்.

தனக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே இருந்த கள்ள உறவை தனது மனைவி மஞ்சு வாரியரிடம் பாவானதான் போட்டுக் கொடுத்தார் என்ற கடுப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாவனாவை பழி வாங்க திட்டம் தீட்டினார் திலீப். அதற்கு கருவியாக பயன்பட்டவர்தான் பல்சர் சுனில் என்பவன்.

.நடிகை பாவனாவை காரில் கடத்தும்போது, முரண்டு பிடித்ததால் உன்னை கொன்றுவிடுவேன் என்றும் என்னைப்பற்றி உனக்கு தெரியாது, நான் கொட்டேஷன் ஆளாக்கும் என மிரட்டியுள்ளான்  பல்சர் சுனில்…

கொட்டேஷன் குரூப் என்றால் கேரளாவில் கூலிப்படை என்று அர்த்தம் வருமாம்.

இந்த வழக்கில் பல்சர் சுனில் சிறையில் அடைக்கப்பட்டதும், அவனை கண்காணிக்க போலீஸ் உளவாளி ஒருவரை கூலிப்படை ஆளைப்போன்று செட்டப் செய்து சிறைக்குள் அனுப்பியது போலீஸ்.

மேலும் சிறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலமும் பல்சர் சுனில் கண்காணிக்கப்பட்டிருக்கிறான்.

அதே நேரத்தில் தனக்கு பேசப்பட்ட பணம் தரப்படாததால் ஆத்திரமடைந்த சுனில், தன்னிடம் உள்ள செல்போன் மூலம் (சுனிலுக்கு செல்போன கொடுத்து உதவியது அந்த போலீஸ் உளவாளிதான்) இயக்குநர் நாதிர்ஷா, திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி மற்றும் அவனது கூட்டாளிகளிடம் பேசியிருக்கிறான். இதனை டேப் செய்த போலீசார் அதை தற்போது முக்கிய எவிடென்ஸ் ஆக பார்க்கிறது.

அந்த டேப்பை ஆதாரமாக கொண்டு சுனிலின் கூட்டாளிகளான விஷ்ணுவையும் விபின் லாலையும் சுனிலுக்கு தெரியாமல் கைது செய்தது போலீஸ்.

இதனிடையே சிறையில் இருந்த சுனில் நடிகர் திலீப்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனக்கு உடனடியாக ஒன்றரைக் கோடி ரூபாய் வேண்டும் என்றும், தராவிட்டால் காட்டிக் கொடுத்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

அந்த கடிதத்தை திலீப் தன்மீது சந்தேகம் எதுவும் வராதபடி  போலீசாரிடம் கொடுத்து விசாரிக்க சொல்லியிருக்கிறார். இப்படி பல வகைகளில் திலீப் போலீசாரிடம் மாட்டியுள்ளார்.

மேலும் பாவானா கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்ட போது எடுத்த ஆபாச படத்தை திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் ஆன் லைன் ஆடைக் கடையில்  கொடுத்து விட்டு லட்சக்கணக்கான ரூபாயை சுனில் பெற்றுச் சென்றது அங்கிருந்த சிசிடிவில் பதிவாகியிருந்தததை போலீசார் கைப்பற்றினர்.

இந்த ஆதாரங்களை எல்லாம் சுனில் முன்பு தூக்கிச்போட்டபோது வாயடைத்துப் போயுள்ளான்.பின்னர் சுனில் தீலீப்புக்கு திராக நடந்த அத்தனை உண்மையையும் கக்கியுள்ளான்.

இதைத் தொடர்ந்து தான் போலீஸ் திலீப் மீது கை வைத்துள்ளது , இப்படி பல வகைகளில் ஆதாரங்களை திரட்டி தீலீப் தான் குற்றவாளி என்பதை கோர்ட்டில் நிரூபிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது,

மாட்டுவாரா திலீப் ? பொறுத்திருந்ததுதான்  பார்க்க வேண்டும்!!

.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விவாகரத்து நோட்டீஸ் முதல் போலீஸ் புகார் வரை: எல்லோர் மீதும் புகார்; பாக்கியத்தின் அதிரடி ஆட்டம் ஸ்டார்ட்!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இளம் தலைமுறை இயக்குனர்கள்! 2026-ல் இயக்குனர்களாக உதயமாகும் கென் மற்றும் ஜேசன் சஞ்சய்!