
விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் அருள் அண்ணாச்சி சினிமா ஹீரோ ஆகிவிட்டார்.
இந்தப்படத்தை சரவணா ஸ்டோர் விளம்பரப் படங்களை தொடர்ந்து எடுத்து வரும் இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்று நினைத்து களத்தில் குதித்தவர்களுக்கு பேரதிர்ச்சி. நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். முதல் முயற்சியிலேயே நயன்தாரா நழுவி விட்டார்.
அடுத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் வந்து முகம் காட்டிய தமன்னா, ஹன்சிகா, உள்ளிட்ட அரை டஜன் ஹீரோயின்களை நாடி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட அண்ணாச்சியுடன் டூயட் பாடத் தயாராக இல்லை. விளம்பரம் வேற... படம் வேற... எங்க கேரியரை கெடுத்துக்க விரும்பவில்லை’’ என முகத்திற்கு நேராகவே முறுக்கிக் கொண்டார்களாம். பணம் பாதாளம் வரை பாயும் என நினைத்தவர்கள் அந்தப் பணம் உள் பாக்கெட்டை கூட உபசரிக்கும் நிலையில் இப்போது இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள். வேறு வழியின்றி ஹிந்தி ஹீரோயின்களை நாடி மும்பையில் டேரா போட்டிருக்கிறார்கள்.
அவர்களும் நோ சொல்லி விட்டால் முற்றிலும் புதுமுகத்தை களமிறக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களாவது பரவாயில்லை. எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறோம். எங்கள் படத்திற்கு இசையமைத்து தாருங்கள் என என்று அனிருத் வீட்டுக் கதவை தட்டி இருக்கிறார்கள். அட அங்கேயும் அவர்களுக்கு அதிர்ச்சி. முடியாது என ஒற்றை வார்த்தையில் முகத்திலடித்தாற்போல கதவை சாத்தி விட்டாராம் அனிருத். அட, இது என்ன அருள் அண்ணாச்சிக்கு வந்த சோதனை என நொந்து போய் தவிக்கிறதாம் இயக்குநர் தரப்பு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.