
ராசிபலன்களில் எதிர்காலத்தைத் தேடித்திரிபவர்கள் கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். இது,இயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கிவரும் ‘தனுசு ராசு நேயர்களே’என்று தலைப்பிடப்பட்டுள்ள படம் குறித்த செய்தி.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ‘ரெபா மோனிகா ஜான்’ மற்றும் ‘ரியா சக்ரவர்த்தி’ ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு மாற்றம். ‘ரியா சக்ரவர்த்தி’க்கு பதிலாக பாலிவுட் ஸ்டார் ‘திகங்கனா சூர்யவன்ஷி’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.‘ரியா’வின் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த மாற்றமாம்.
திகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொண்ட இயக்குநர் சஞ்சய் பாரதி, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ‘ஹிப்பி’ படத்தின் டிரைலரை பார்த்தேன். அவரின் திரை இருப்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உடனே நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்..!” என்றார்.இந்த வாரம் முதல் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் படப்பிடிப்பில் ‘திகங்கனா சூர்யவன்ஷி’ கலந்து கொள்வதையும் உறுதிபடுத்துகிறார் இயக்குனர் சஞ்சய்.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதையாம். ஸோ தினசரி செய்தித்தாள்களில் ராசிபலன் பார்க்கும் வழக்கமுள்ளவர்கள் இப்படத்துக்கு ஆர்வம் காட்டக்கூடும் என்று எதிர்பார்க்கிறது படக்குழு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.