"இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்" வெற்றிக்கு தங்க பரிசு கொடுத்த ஹரிஷ் கல்யாண்! இன்ப அதிர்ச்சியில் படக்குழு!

Published : Mar 22, 2019, 07:02 PM IST
"இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்" வெற்றிக்கு தங்க பரிசு கொடுத்த ஹரிஷ் கல்யாண்! இன்ப அதிர்ச்சியில் படக்குழு!

சுருக்கம்

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்". இந்த படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கநாணயம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், பிரபல நடிகராக அறியப்படவில்லை. ஆனால் தற்போது முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து வருகிறார்.  

இவர் நடிப்பில், கடந்த வாரம் "புரியாத புதிர்" படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்" திரைப்படம் திரைக்கு வந்தது.  இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

மேலும் மாகாபா ஆனந்த், பாலசரவணன்,  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காதல் படமாக உருவாகியுள்ள, இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடத்த   வெற்றி விழா நிகழ்ச்சியில், நடிகர் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!