ஹிட்டடித்த டைரக்டர் அடுத்த படத்துக்குப் போகுமுன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நினைத்தால் வதந்தி கிளப்பும் புண்ணியவான்கள் அவர்களை அவ்வளவு லேசில் விடுவதில்லை.
ஹிட்டடித்த டைரக்டர் அடுத்த படத்துக்குப் போகுமுன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நினைத்தால் வதந்தி கிளப்பும் புண்ணியவான்கள் அவர்களை அவ்வளவு லேசில் விடுவதில்லை.
தற்போது அப்படி ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு முழிப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்புவரை அமீர்கானுடன் இந்திப்படம் இயக்கப்போவதாக கிசுகிசுக்கப்பட்டவரை லேட்டஸ்டாக அஜீத்துடன் இணைத்துவைத்து துவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது பா.ரஞ்சித் ‘விஸ்வாஸம்’ படத்துக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த அஜீத்தை சந்தித்து கதை சொன்னதாகவும். அந்தக் கதையும் ரஞ்சித்தின் வழக்கமான தலித் ஆதரவு கதையாக இருந்ததால் அஜீத் நடிக்க மறுத்ததாகவும் மிக லாஜிக்காக ஒரு கதை பின்னப்பட்டு, அது வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்தமாதிரி செய்தி பரப்புபவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை எப்படியும் சம்பந்தப்பட்ட இருவரும் மறுப்பு சொல்லப்போவதில்லை என்பதுதான்.
இது குறித்து இயக்குநர் ரஞ்சித் வட்டாரத்தில் விசாரித்தபோத,. அவர் இன்றுவரை முழுக்க முழுக்க தனது தயாரிப்பான ’பரியேறும் பெருமாள்’ பட புரமோஷன் வேலையாக மட்டுமே இருக்கிறார். அடுத்த பட வேலைகள் என்று எதையும் துவங்கவில்லை’ என்கிறார்கள்.
தனது கதையை நிராகரித்ததால் அஜீத்-பா.ரஞ்சித் இடையே கைகலப்பு. தென்மாவட்டங்களில் பரவும் சாதிக்கலவரம்… அடுத்து இப்பிடி கிளப்புங்கய்யா