
பெர்சனல் விஷயத்தை உலகறிய சொல்லும் பெண்கள்... என்ன செய்யப்போகிறார்ஆர்யா...!
புதியதாக தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியில்,எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் புது நிகழ்ச்சியை தொடங்கி வருகிறார் நடிகர் ஆர்யா...
ஆர்யாவின் ஒரே ஒரு வீடியோ மூலம்,அவரை திருமணம் செய்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டிய பல்லாயிரக்கணக்கான பெண்களில், 16 நபர்களை தேர்வு செய்து நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள பெண் போட்டியாளர்கள் அவர்களின் பெர்சனல் வாழ்கையில் நடந்த அனைத்து விஷயமும் கேமரா முன் தெரிவிக்கின்றனர்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்து அதில் வெற்றி பெரும் பெண்களுடன்,சில மணி நேரம் தனிமையில் உரையாடுவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெறுகிறது.
நிகழ்ச்சியில் முடிவில்,எந்த பெண் போட்டியாளர் வெற்றி பெறுகிறாரோ அவரை ஆர்யா மணக்க விரும்புவதாக கூறபடுகிறது.
ஆனால் மற்ற பெண்களின் ஆண் நண்பர்கள் யார்...காதல் செய்துள்ளார்களா....எதனால் திருமணம் நடைபெறவில்லை...என்ன பிரச்சனை நடந்தது ..? அந்த ஆண் நண்பர் எப்படி தன்னை அசிங்கமாக பேசினார்கள் உள்ளிட்ட பலவற்றை கேமரா முன் கொண்டுவரப் படுகிறது...
போட்டியில் இருந்து வெளியேறும் பெண்கள்,அவர்களுடைய எதிர்கால வாழ்கையில் மேலும் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது என்றும்,தனக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்களை, நிகழ்ச்சியின் மூலம் உலகறிய செய்துள்ளதால் இது பிற்காலத்தில் அவர்களுடைய வாழ்கையில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த கூட நேரிடு என நிகழ்ச்சியை பர்ர்த்து வரும் பொதுமக்கள் கருதுகின்றனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.