டாப் ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR... எஸ்.பி.பி.க்காக மனம் உருகி பிரார்த்தித்த திரைபிரபலங்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 20, 2020, 7:21 PM IST
Highlights

இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். அவர் பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்திருந்தார் பாரதிராஜா. இதையடுத்து ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று கூறியிருந்தனர். 

இந்நிலையில் மாலை 6 மணிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பியின் பாடலை ஒலிக்க விட்டு அவருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. #GetWellSoonSPBSIR என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம் 🙏🙏🙏 pic.twitter.com/RmwGhPGPAD

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

God does miracles...🙏🤩 Sir pic.twitter.com/Vb9isTApiV

— Actress Harathi (@harathi_hahaha)

🙏🏻

— Anirudh Ravichander (@anirudhofficial)

Let’s pray for our now

— venkat prabhu (@vp_offl)

PRAY for the HEALTH of the LEGEND🙏🏻❤️

Lets all put our HEARTS & SOULS
Together & Keep Praying till He gets Bak HALE & HEALTHY SOOON & SING for all of US !!

Lov U sir ! We r all waiting for U ❤️🎶🙏🏻 pic.twitter.com/nRTQ3Mwgxw

— DEVI SRI PRASAD (@ThisIsDSP)
click me!