
பாரபட்சமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விளையாட்டு காட்டும் கொரோனா, திரைப்பிரபலங்களையும் சும்மா விடவில்லை. ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்திலும் எக்கச்சக்கமான நடிகர், நடிகைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் திரைத்துறையினரும், ரசிகர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், ராஜமெளலி மற்றும் குடும்பத்தினர், நடிகை நிக்கி கல்ராணி, நடிகை தமன்னாவின் பெற்றோர் என தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தற்போது பிரபல பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐசியூ- வில் சிகிச்சை பெற்று வருவதும் திரையுலகினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் நடந்த கூட்டு பிரார்த்தனைகு பிறகு அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெனிலியா கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன். கடவுளின் அருளால் இன்று கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளது. குவாரண்டைனில் இருந்த 21 நாட்கள் மிகவும் சவாலாக இருந்தது. எனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றாக சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், கொரோனா எனும் பேயை எதிர்த்து போராட இதுவே சிறந்த வழி என பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.