மெர்சல் சர்ச்சை... தமிழிசைக்கு பாஜக நடிகை பதிலடி!

 
Published : Oct 20, 2017, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மெர்சல் சர்ச்சை... தமிழிசைக்கு பாஜக நடிகை பதிலடி!

சுருக்கம்

gayatri rahuram replay for tamizhisai in mersal issue

 தேசியக் கட்சியான பாஜக., தற்போது வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் மாஸ்ஸாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படத்தில், GST குறித்து சர்ச்சையான வசனம் இடம்பெற்றுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்காவிட்டால், நீதிமன்றம் வரை செல்வோம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறி இருந்தார். தற்போது இவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடன இயக்குனரும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓர் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு படத்தை என்டர்டைன்மெண்டாக  பார்க்க வேண்டுமே தவிர அதை அரசியலாகப் பார்க்கவேண்டாம். வசனங்களை நடிகர்கள் தானாகப் பேசுவது இல்லை; வேறு ஒருவர் எழுதிக் கொடுத்துதான் பேசுகின்றனர்! இதற்கு ஏன் நடிகர்களை குறைகூற வேண்டும்.

இந்தப் படத்தில் விஜய் ஒரு மருத்துவராகவும், மேஜிக் செய்பவராகவும் நடித்துள்ளார். உண்மையில் அவர் ஒரு மருத்துவர் இல்லை; அதே போல உண்மையில் அவர் மேஜிக் மேனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

பாஜக., தலைவரை ஒரு பாஜக நிர்வாகியே எதிர்ப்பது போல் கருத்து தெரிவித்துள்ளது இந்தக் கட்சியில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!