
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், ஓவியா மற்றும் காயத்ரி இருவரும் பிக் பாஸ் அறைக்கு வரவைக்கப்படுகின்றனர்.
அப்போது இருவரும் மனதில் படுவதை பேசுங்கள், பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புகின்றனர் என கூறுகிறது பிக் பாஸ் குரல்.
இந்நிலையில் அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ள மைக்கை எடுத்து பிக் பாஸ் வீட்டின் வெளியே உள்ள ஓவியா வேறுமாதிரி இருக்கிறார். ஆனால் உள்ளே வேறுமாதிரி இருக்கிறார் என ஓவியாவை பார்த்து கேட்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் அவர் அடுத்தவர்கள் சொல்லும் விதத்தை வைத்து என்னை பார்க்காதீர்கள் என்று கூறி, உங்களை தவறாக நினைத்து விட கூடாது என்பதற்காகதான் நடித்தேன் என்று கூறுகிறார். இதனை கூறும்போது ஓவியா அழ ஆரம்பித்து விட இதனை நாள் ஓவியாவை விரோதியாக பார்த்த காயத்ரி ஓவியாவை கட்டி அணைத்து அழ வேண்டாம் என கூறி ஆறுதல் கூறுகிறார்.
இதனை நாள் பலராலும் தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டு ஒதுக்கி தள்ளப்பட்ட ஓவியா இனி அனைவருடனும் இணைந்து இந்த வீட்டில் சந்தோஷமாக இருப்பார் என தோன்றுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.