
முதல் பாடல்:
சந்திரமுகி படத்தில் 'வாழ்த்துறேன் வாழ்த்துறேன்' என்கிற பாடல் மூலம் வெள்ளித்திரையில் தன்னுடைய நாட்டுப்புற இசை பயணத்தை ஆரம்பித்தவர் பிரபல நாட்டுப்புற இசை பாடகி சின்னப்பொண்ணு.
ஆரம்பம்:
13 வயதில் சர்ச் மற்றும் கோவில் விழாக்களில் பாடுவது என இசை மீது கொண்ட ஆர்வத்தில் ஆரம்பமான இவருடைய இசை பயணத்தை, சினிமாத்துறை வரை கொண்டு வந்து சேர்த்தவர் மறைந்த நாட்டுப்புற இசைக்கலைஞர் கே.ஏ.குணசேகரன். சின்னபொண்ணு பாடும் பாட்டை எதர்ச்சியாக இவர் கேட்ட நேர்ந்தது. அப்போது சின்னபொண்ணுவின் குரல் வளம் வித்தியாசமாகவும் தெளிவாகவும் இருந்ததால் இவருக்கு பல மேடைகளில் பாட வாய்ப்புக் கொடுத்தது மட்டும் இன்றி பட வாய்புகள் கிடைக்கவும் உதவி செய்தார்.
படங்களில் பாடும் வாய்ப்பு:
சந்திரமுகி படத்தில் இவர் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது. மேலும் இன்று வரை அனைத்து திருமண விழாக்களிலும் இவர் பாடிய 'வாழ்த்துறேன்... வாழ்த்துறேன்..' பாடல் கண்டிப்பாக இருக்கும்.
மேலும், தகப்பன்சாமி, திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட 20 மேற்பட்ட படங்களில் பாடியுள்ள இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு படங்களிலும் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.
மாடர்ன் ட்ரெஸ்ஸில் சின்னபொண்ணு:
ஏற்கனவே இவர் சோலோவாக சிம்போனி நிறுவனத்திற்கு ஒரு சில பாடல்களை பக்தி மயமாக பாடியுள்ள போதிலும் தற்போது, நடிகரும் நடன இயக்குனருமான சதீஷ் நடனமாடியுள்ள 'கூவ கூவ' என்கிற பாடலை கலக்கலாக மாடர்ன் உடையில் வந்து பாப் கலைஞர் பாணியில் பாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு இசையமைத்துள்ள பாடகரும், இசையமைப்பாளர் கார்த்திக் கடைசி நிமிடத்தில் இந்த பாடலில் தலைக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.