ரெகார்டிங் தியேட்டரை படுக்கை அறையாக மாற்றிய பிரபல இயக்குநர்...ஒரு பாடகியின் பகீர் ஒப்பாரி...

Published : May 16, 2019, 10:55 AM ISTUpdated : May 16, 2019, 10:56 AM IST
ரெகார்டிங் தியேட்டரை படுக்கை அறையாக மாற்றிய பிரபல இயக்குநர்...ஒரு பாடகியின் பகீர் ஒப்பாரி...

சுருக்கம்

நடிகைகளுக்கு இணையாக பாடகிகளும் படுக்கைக்கு அழைக்கப்பட்டு படாதபாடு படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை சின்மயிக்கு அடுத்த படியாக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார் ஒரு தெலுங்குப் பாடகி.  

நடிகைகளுக்கு இணையாக பாடகிகளும் படுக்கைக்கு அழைக்கப்பட்டு படாதபாடு படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை சின்மயிக்கு அடுத்த படியாக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார் ஒரு தெலுங்குப் பாடகி.

தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ’ஸ்ரீ ராமதாசு’, ’ஹேப்பி டேஸ்’, ’எமதொங்கா’, ’லயன்’ உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர். சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றிருப்பவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடத் துவங்கிய சமயத்தில் பலர் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாகவும் அதையும் மீறி தான் மிகவும் கஷ்டப்பட்டே இந்த நிலைக்கு வந்ததாகவும் கூறினார்.

தனக்கு நடந்த அதிகபட்ச அதிர்ச்சியான சம்பவம் ஒன்றைப் பற்றி விவரித்த அவர்,’ இன்றைக்கும் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் அவர். தனது படத்தில் ஒரு நல்ல பாடல் இருப்பதாக பாடுவதற்கு ரெகார்டிங் தியேட்டருக்கு அழைத்தார். ஆனால் அங்கு இசைக்கலைஞர்கள் யாரும் இல்லை. அந்த டைரக்டர் மட்டுமே இருந்தார். தனிமையைப் பயன்படுத்தி என்னைப் படுக்கைக்கு அழைத்தவர் என்னை மிகவும் நெருங்கி ஆபாசமாகப் பேச ஆரம்பித்தார். என் விருப்பமின்மையை அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அவரது அத்துமீறல் அதிகமாகவே செருப்பைக் கழட்டிக்காட்டிவிட்டு தப்பி ஓடிவந்துவிட்டேன்’என்கிறார் பிரணவி. அந்த இயக்குநரின் பெயரை பிரணவி வெளியிட்டே ஆகவேண்டும் என்று தற்போது பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?