
தீபாவளி ட்ரீட்டாக விஜய் - அட்லி கூட்டணியில் திரைக்கு வந்த பிகில் திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட மைல் கற்களை கடந்துள்ளது. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் கெத்து காட்டினார் தளபதி. அந்த படத்தின் வசூல் சூப்பர் ஸ்டாரின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது.
இதுவரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ள பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி தயாரிப்பாளர் தரப்பு வாய் திறக்கவில்லை. இருந்தாலும் அந்த தகவலை கேள்விப்பட்ட தளபதி ஃபேன்ஸ் ட்விட்டரில் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.
தளபதியின் வெற்றியைக் கொண்டாடுவதாக கூறிக்கொண்டு அஜித்தை அடித்து துவைத்தனர். இதனால் கடுப்பான தல ரசிகர்களும் விஜயைப் பற்றி கொச்சை கொச்சையாக மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்தனர். இப்படி டுவிட்டரில் கட்டி புரளாத கொடுமையாக தல, தளபதி ஃபேன்ஸ் அடித்துக்கொண்டனர்.
இந்நிலையில் பிரபல வார இதழ் அறிவித்துள்ள 2019ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது விஸ்வாசம் படத்திற்கு வழங்கப்பட உள்ளது. கண்ணீரும் கலகலப்பும் கலந்த குடும்பக்கதையான விஸ்வாசத்தை காண தியேட்டர்களில் குடும்பம், குடும்பமாக ரசிகர்கள் கூடினர்.
கோவக்கார கணவன், பாசக்கார அப்பா, வில்லனை அடித்து தூள் கிளப்பும் ஹீரோ என பல பரிமாணங்களில் மாஸ் காட்டினார் அஜித். எனவே விஸ்வாசம் படத்திற்கு இந்த விருது வழங்கப்படுவது பொருத்தமானது என சினிமா குறித்து அறிந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக கெத்து காட்டிய தளபதி ரசிகர்களின் பிகில் சத்தத்தை எங்கப்பா காணோம் என அஜித் ரசிகர்கள் வெறி கொண்டு தேடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.