
நவ்ஜோத் சிங் எனும் 22 வயதே ஆன இளம் பாடகர், துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் சண்டிகரில் தங்கி தனது பணியை செய்து வருகிறார். சம்பவம் நடக்கும் முன்னர், இவர் தனது சொந்த ஊரானா பெஹ்ராவிற்கு செல்ல திட்டமிட்டு இருந்திருக்கிறார். இதை தனது அம்மாவிடம் ஃபோனில் தெரிவித்திருகிறார். ஆனால் ஃபோனில் கூறிய படி அவர் வீட்டிற்கு வரவில்லை.
மேலும் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றபோது ஃபோன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் கலக்கமடைந்த அவரது குடும்பத்தார் அவரைத்தேடத்தொடங்கினர்.அப்போது தேரா பஸ்ஸி பகுதியில் வைத்து அவரது உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. ஐந்து துப்பாக்கி குண்டுகளால் தாக்கப்பட்டு, இரத்தவெள்ளத்தில் இருந்த அவரின் உடலின் அருகே அவருடைய கார் நின்று கொண்டிருந்தது.
காரில் இருந்த நவ்ஜோதின் உடைமைகள் அப்படியே இருந்தது. யாராவது திருடுவதற்காக இந்த கொலையை செய்திருந்தால், பொருள்களை இப்படி விட்டு சென்றிருக்க மாட்டார்கள். இங்கு நடந்திருப்பவற்றை பார்க்கும் போது இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று தான் தோன்றுகிறது. என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
நவ்ஜோத்திற்கு தொழில் முறை போட்டி என யாரும் இருப்பதாக தெரியவில்லை. என அவரது நண்பர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர் ஒரு உணவகத்தில் வைத்து யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததை அவரது உறவினர்கள் சிலர் பார்த்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் காதல் விவகாரம் காரணமாக கூட, இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனும் கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.