"இந்த மனுஷன் பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க"... பிரபல நடிகரை அசால்ட்டாக அசிங்கப்படுத்திய சின்மயி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 23, 2019, 11:42 AM ISTUpdated : Dec 23, 2019, 11:48 AM IST
"இந்த மனுஷன் பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க"... பிரபல நடிகரை அசால்ட்டாக அசிங்கப்படுத்திய சின்மயி...!

சுருக்கம்

இந்நிலையில், ஒய்.ஜி. மகேந்திரன் பேச்சுக்கு பிரபல பாடகி சின்னமயி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி,  "இந்த மனுஷன் கருத்தை நாம் எல்லோரும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை திருத்த முடியாது. அதேபோல நமக்கு நேர விரயம்" என்று கடுமையாக சாடியுள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி, மேற்குவங்கம், கர்நாடகா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தாலும், எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன.

சமீபத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மாணவர்கள் விடுமுறைக்காகவும், பெண்களை சைட் அடிப்பதற்காகவும் தான் போராட்டத்தில் கலந்து கொள்வதாக கருத்து தெரிவித்தார். மாணவர்களின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில், ஒய்.ஜி. மகேந்திரன் பேச்சுக்கு பிரபல பாடகி சின்னமயி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி,  "இந்த மனுஷன் கருத்தை நாம் எல்லோரும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை திருத்த முடியாது. அதேபோல நமக்கு நேர விரயம்" என்று கடுமையாக சாடியுள்ளார். பாடகி சின்மயின் இந்த பதிவிற்கு ஏராளமானோர் தங்களது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!