குளியல் அறையில் இறந்து கிடந்த பிரபல சீரியல் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Oct 03, 2018, 11:58 AM ISTUpdated : Oct 03, 2018, 01:32 PM IST
குளியல் அறையில் இறந்து கிடந்த பிரபல சீரியல் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சுருக்கம்

பிரபல சீரியல் நடிகை நீது அகர்வால் காய்ச்சல் காரணமாக, பாத்ரூமில் இறந்து கிடந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

பிரபல சீரியல் நடிகை நீது அகர்வால் காய்ச்சல் காரணமாக, பாத்ரூமில் இறந்து கிடந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 'ஏஹ் ஹை மோஹப்டியின்' என்ற சீரியலில் வேலைக்காரி வேடத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை நீது அகர்வால். மேலும் மற்ற சில சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று பாத்ரூமில் மயங்கி கிடந்துள்ளார்.  இதைக் கண்டு அதிர்ந்த அவரது குடும்பத்தினர். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் நீதுவின் உயிர் பிரிந்தது.

இந்த தகவலை அதே சீரியலில் நடித்த அலி கோணி என்கிற  துணை நடிகை அறிவித்துள்ளார். நீது அகர்வாலின் மறைவுக்கு, ரசிகர்களும் மற்றும் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

வில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!