
கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், துரதஷ்ட வசமாக பல உயிர்களை உலகளவில் கொரோனா கொன்றுவிட்டது. இதுவரை இதற்கான மருந்து கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உலக அளவில் பல ஆராச்சியாளர்கள் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.
கொரோனாவில் இருந்து இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினர் பலர் மீண்டு, உடல் நலம் தேறி வந்தாலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டால் அவர்களை மீட்பது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் 80 வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் ஆலன் கார்பீல்ட் கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்துள்ளார், என்பதை அவருடைய சகோதரி தெரிவித்துள்ளார்.
The Conversation போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். ஒரு குத்துச்சண்டை வீரராகவும் விளையாட்டு எழுத்தாளராகவும் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பின் நடிகரானார். 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.