
சினிமா துறையில் பல பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக, நடிகைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் சில மலையாள நடிகைகள் கூட சினிமா துறையில், நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பது குறித்து வெளிப்படையாகவே கூறியிருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அவ்வப்போது நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழில் செய்வதாக நடிகைகள் சிலர் கைது செயாப்படுவதும் வழக்கமாகி வருகிறது.
கடந்த மாதம் கூட, 'வாணி ராணி' சீரியல் நடிகை சங்கீதா, சென்னை இசிஆரில் உள்ள, சொகுசு விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பாட்டார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில், பிரபல போஜ்புரி நடிகை ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருடன் சில துணை நடிகைகளும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து, ரூ 40 ஆயிரம் பணமும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.