
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும், முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், முதல் முறையாக தன்னிடம் மிகவும் மென்மையாக காதலை வெளிப்படுத்திய நடிகர் ஒருவரை பற்றி கூறியுள்ளார்.
சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், இவரின் திரையுலக வாழ்க்கை பற்றியும், தான் நடித்த படங்கள் மற்றும் திரையுலகில் தான் சந்தித்த, அனுபவங்கள் பற்றி கூறியுள்ளார்.
இதில், உங்களுடன் நடித்தவர்கள் யாரேனும் உங்களிடம் காதலை கூறியது உண்டா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கொடுத்த, ரகுல் ப்ரீத் சிங்.
தன்னிடம் பிரபல நடிகர் ஒருவர் மிகவும் மென்மையான முறையில், அழகாக காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் அதில் ஆரம்பத்தில் இருந்ததே விருப்பம் இல்லை. இது குறித்து தன்னுடைய தோழியிடம் பகிர்ந்து கொண்டேன், அவர் தன்னை யோசித்து பதில் சொல்லுமாறு கூறினார். பின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருப்பதால், காதலில் விருப்பம் இல்லை என்பதை தெரிவித்துவிட்டேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.