'ஜெமினிகணேசன்' வேடத்தில் நடிக்கும் வாரிசு நடிகர்.... 

 
Published : Apr 24, 2017, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
'ஜெமினிகணேசன்' வேடத்தில் நடிக்கும் வாரிசு நடிகர்.... 

சுருக்கம்

dulhar act jeminiganesan character

நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் 'சாவித்ரி' கேரக்டரில் 'கீர்த்திசுரேஷூம்' மற்றொரு முக்கிய கேரக்டரில் 'சமந்தாவும்' நடித்து வருகின்றனர் மேலும் மற்றொரு கதாபாத்திரம் நடிப்பதற்காக 'அனுஷ்காவிடமும்' படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் 'ஜெமினி கணேசன்' கேரக்டரில் நடிக்க மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டியின் மகன் 'துல்கர் சல்மான்'  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் மன்னன் 'ஜெமினி கணேசன்' கேரக்டரில் நடிக்க சூர்யா உள்பட பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் இறுதியில் 'துல்கர் சல்மான்' தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், காதல் மன்னன் கேரக்டருக்கு துல்கர் சரியான தேர்வாக இருப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

1950கள் மற்றும் 60களில் தொடங்கி தொடர்ந்து முப்பது ஆண்டுகள் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும், அனைத்து முக்கிய கேரக்டர்களையும் ஏற்று நடித்தவர் 'சாவித்திரி'. 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இன்றைய தலைமுறையினர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் வலுவான திரைக்கதையுடன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!