ரஜினி படத்தை பொங்கலுக்கு வெளியிடக்கூடாது...!! தர்பாருக்கு எதிராக இறங்கிய பாரதிராஜா... காரணம் என்ன...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2020, 4:02 PM IST
Highlights

கமலஹாசனுக்கு ஒரு இளநீர் ,  ஸ்ரீதேவிக்கு ஒரு  இளநீர் தான் வாங்குவேன்,  மிகச் சிக்கனமாக அந்த படத்தை எடுத்தேன் கண்டுகொள்ளப்படாத மலைவாழ் மக்களை குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
 

பண்டிகை நாட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடாதீர்கள் என இயக்குனர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார் இந்த பொங்கலுக்கு ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் பாரதிராஜா இவ்வாறு கூறியுள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  சென்னை வடபழனி கமலா திரையரங்கில் அடவி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் இயக்குனர் பாரதிராஜா கவிஞர் சினேகன்  தயாரிப்பாளர் சிவி குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

  

அதில் பேசிய இயக்குனர் பாரதிராஜா அடவி  படத்தின் காட்சிகளை பார்த்தால் மனதிற்கு நன்றாக இருக்கிறது அடவி என்றால் அடர்ந்த வனம் என்பது எனக்கே தெரியவில்லை அது  தூய தமிழ்ச் சொல் வனத்தை குறித்து எடுக்கப்பட்டுள்ளது.  காடுகளை நேசிக்கும் மனிதனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும் அதுவும் குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் நான் பதினாறு வயதினிலே படம் எடுக்கும்போது 5 லட்சம் தான் பட்ஜெட் ,  28 நாட்கள் படப்பிடிப்பு , என்னுடைய பாக்கெட்டில்  பத்து ரூபாய்தான் இருக்கும் கமலஹாசனுக்கு ஒரு இளநீர் ,  ஸ்ரீதேவிக்கு ஒரு  இளநீர் தான் வாங்குவேன்,  மிகச் சிக்கனமாக அந்த படத்தை எடுத்தேன் கண்டுகொள்ளப்படாத மலைவாழ் மக்களை குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 

காடு,  செடிகொடிகளை நேசிக்க வேண்டும் என்பது தெரிகிறது,   ஒரு மரத்தை வெட்டினால் அது ஒரு மனிதனை வெட்டுவதற்கு சமம் என்றார் ஆவர்.  நிச்சயம் இது போன்ற சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் தீபாவளி , பொங்கல் பண்டிகை நாட்களில் சூப்பர் ஸ்டார் நடித்த பெரிய படங்களில் வெளியிடாதீர்கள் அந்த படங்கள் எப்போது வந்தாலும் நன்றாக ஓடும் அந்த நாட்களில் பெரிய படங்களை வெளியிட்டால் தான் அது கவனம் பெறும் அப்போதுதான் மக்கள் மனதில் சரியாக இந்த படங்கள்போய் சேரும் என்பது என் கருத்து என்றார்.  இதற்காகத்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் இது தயாரிப்பாளர் சங்கத்திலும் கூறியிருக்கிறார் என்றார். 
 

click me!