குழந்தைகளுக்கு உதவுங்கள்..! முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சத்யராஜ் மகள் திவ்யா!

By manimegalai aFirst Published Apr 8, 2020, 4:16 PM IST
Highlights

பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள் இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள் ரத்தசோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடு பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள் இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள் ரத்தசோகை மற்றும் இரும்பு  சத்து குறைபாடு பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...  " கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன். அப்போது... கார்ப்பரேஷன் பள்ளிகளில் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இருப்பது தெரியவந்தது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அரசிடம் பேசினேன். அப்போது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது. 

இந்நிலையில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டதால், கார்ப்பரேஷன் பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு மற்றும் மதிய உணவு திட்டத்தால் வழங்கப்படும் இரும்புச் சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொண்ட உணவுகளை இலவசமாக வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் இரும்புச்சத்து குறைபாடு மற்றும்  இரத்த சோகையை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணராக நான் உறுதியாக நம்புகிறேன். நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தைக்கு மோசமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும், இதன் விளைவாக குழந்தை COVID-19 மற்றும் பசியின்மை, தொற்றுநோய்கள் மற்றும் எதிர்பார்த்த விகிதத்தில் வளரத் தவறுவது  போன்ற என  பிற பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடும். 

எனவே குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்துக்களை இலவசமாக வழங்குவதன் மூலமாகவே இரத்த சோகையைக் குறைக்கமுடியும். COVID-19 மற்றும் பிற நோய்த்தொற்றுகளை எதிர்க்க அவர்களுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என தெரிவித்துள்ளார். 

மேலும் இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசிடம் திவ்யா சத்யராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

click me!