விஷால் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரபல இயக்குனர் அதிரடி கைது!

By manimegalai aFirst Published Mar 3, 2020, 4:57 PM IST
Highlights

ஏன் எல்லார் கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க, எப்படி ஸ்டைல் மைண்டைன் பணீறீங்க, எப்போ நம்ப அடுத்த ட்ரிப் போறோம், 5 மணிக்கு எழுதிரிச்சிடாதீஙங்க, அவரு எழுந்துட்டா எஅல்லாரையும் எழுப்பு விட்டுடுவாரு.
 

நடிகர் விஷாலின் கால்ஷீட் பெற்று வைத்திருப்பதாகவும், அந்த படத்திற்காக தயாரிப்பு செலவிற்காக, கொஞ்சம் கொஞ்சமாய் ரூபாய்.47 லட்சம் பெற்றதாக இயக்குனர் வடிவுடையான் மீது, மகேஷ் கோத்தாரி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குனர் வடிவுடையான், நடிகர் கரண் 'தம்பி வெட்டேந்தி சுந்தரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த 'சவுகார்பேட்டை', பரத் நடித்த 'பொட்டு' ஆகிய படங்களை இயக்கினார். மேலும் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோனை வைத்து 'வீரமாதேவி' என்கிற வரலாற்று படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, விருகம்பாக்கத்தில் சேர்ந்த சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான  மகேஷ் கோத்தாரி என்பவரிடம், இயக்குனர் வடிவுடையான்.... நடிகர் விஷாலிடம் தான் கால்ஷீட் வாங்கி வைத்திருப்பதாகவும், 7 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை பிரமாண்டமாக எடுக்க உள்ளதாகவும் கூறி, மகேஷ் கோத்தாரியை இந்த படத்தை தயாரிக்க கூறியுள்ளார்.

மேலும் படத்தின் முன் தயாரிப்பு செலவிற்காக 47 லட்சம் அவரிடம் இருந்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.  பணத்தை பெற்று பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பை துவங்காமல் இழுக்கடித்து வந்துள்ளார். பின் விசாரித்தபோது விஷாலிடம் அவர் கால்ஷீட் வாங்க வில்லை என்கிற தகவல் மகேஷ் கோத்தாரி தெரியவந்து உள்ளது.

எனவே வடிவுடையான் தன்னை ஏமாற்றி பணம் மோசடி செய்துவிட்டதாக விட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது மகேஷ் கோத்தாரி விருகம்பாக்கம் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது போலீசார் வடிவுடையான் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

click me!