
கமலின் முன்னேற்பாட்டால் ‘இந்தியன் 2’மீண்டும் துவங்கவுள்ள நிலையில் , ’இம்சை அரசன்’ வடிவேலுவுக்கு இச்செய்தி இடியாய் இறங்கியிருப்பதாகவும், இதனால் மனிதர் பயங்கர அப்செட் ஆகியுள்ளதாகவும் தகவல்.
சிலபல பஞ்சாயத்துகளுக்குப்பின் ‘இந்தியன் 2’படம் மறுபடியும் துவங்கவிருப்பதையும் அதற்கான முன்னெடுப்பில் கமல் மும்முரமாக இருப்பதாகவும் ஏற்கனவே குறிப்பிடிருந்தோம். இந்த இணைப்பின் மூலம் தனது. மற்றும் லைகா நிறுவனத்தின் நீண்டகாலத் தலைவலியான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’படப்பிரச்சினைக்கும் ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
லைகா நிறுவனம் ‘இந்தியன் 2’படத்தில் தன்னிடம் மிகக் கெடுபிடியாக நடந்துகொண்டதற்குக் காரணமே தனது நிறுவனத்தின் மூலம் லைகாவுக்கு தயாரித்துத்தருவதாக ச்சொன்ன ‘24ம் புலிகேசி பணம் மொத்தமாக முடங்கியதுதான் என்று ஷங்கர் உறுதியாக நம்புகிறார். அப்பிரச்சினையை இன்னும் தயாரிப்பாளர், நடிகர் சங்கங்களின் மூலம் துரத்தினால் அது அவ்வளவு லேசுக்குள் முடிவுக்கு வராது. எனவே இனி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு வடிவேலுவை முடக்கவேண்டும் என்று ஷங்கர் முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். அப்படி நடந்தால் ஏற்கனவே மூன்று வருடங்களாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் வடிவேலு நிரந்தரமாக முடங்கிவிடுவார் என்று நம்புகிறார் ஷங்கர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.