'பரோல்' politics பேசுற Non-political படம்..!

By manimegalai aFirst Published Dec 19, 2020, 2:41 PM IST
Highlights

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பில், தயாரிப்பாளர் மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ’பரோல்’. இப்படத்தை துவாரக் ராஜா என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்.
 

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பில், தயாரிப்பாளர் மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ’பரோல்’. இப்படத்தை துவாரக் ராஜா என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்.

’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்த லிங்கா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா ஆகிய புதுமுக நடிகைகள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

’பரோல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி சம்பீத்தில் வெளியிட்ட நிலையில். படத்தின் போஸ்டருக்கும், மோஷன் பவ்ஸ்டாருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் தனி சிறப்பு குறித்து, ’பரோல்’ படத்தின் இயக்குனர் துவாரக் ராஜா கூறுகையில்... 

“இது நான் ரெண்டாவது முறையா இயக்குற முதல் படம். ஒரு 48 மணிநேரத்துல  வியாசர்பாடில ஆரம்பிச்சு திருச்சி, மதுரை போயி திரும்பி விக்ரவண்டி, சேலையூர், வியசார்பாடின்னு வந்து முடியுற கதைல க்ரைம், திரில்லர், ஆக்ஷன், டிராமா-ன்னு கலந்து கட்டி அடிச்சிருக்கோம்.  டைட்டில் பரோல்-ன்றதால நிறைய பேர் இத பொலிடிக்கல் படமா-ன்னு கேக்குறாங்க. இது பரோல் சம்மந்தமான politics பேசுற Non-political படமா இருக்கும்' என்று கூறியுள்ளார். மேலும் ’பரோல்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!