’நடிகர் விஜய்யை வைத்து நான் படம் இயக்கவில்லை’...அவசரமாக மறுக்கும் பிரபல இயக்குநர்...இதுதான் காரணம்...

Published : Sep 11, 2019, 10:53 AM IST
’நடிகர் விஜய்யை வைத்து நான் படம் இயக்கவில்லை’...அவசரமாக மறுக்கும் பிரபல இயக்குநர்...இதுதான் காரணம்...

சுருக்கம்

நடிகர் விஜயை அநாவசியமாக தர்மசங்கடப்படுத்தவேண்டாம். அவரை வைத்துப் படம் இயக்கும் நிலையில் நான் இல்லை’என்று ‘திருமலை’வெற்றிப்பட இயக்குநர் ரமணா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயை அநாவசியமாக தர்மசங்கடப்படுத்தவேண்டாம். அவரை வைத்துப் படம் இயக்கும் நிலையில் நான் இல்லை’என்று ‘திருமலை’வெற்றிப்பட இயக்குநர் ரமணா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யை வைத்து ’திருமலை’, ’ஆதி’ உள்ளிட்ட படங்களையும் தனுஷை வைத்து ‘சுள்ளான்’படத்தையும்  இயங்கியவர் ரமணா சந்திரசேகர். இவர், சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த வாரம் மனைவி, மகளுடன் காரில் சென்றபோது, போக்குவரத்து  காவலர்கள் விதிமீறி செல்லாத போதும், அவரது காரை நிறுத்தி அபாரதம் விதித்தனர். மேலும்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் நோய் தன்மை குறித்து மனம் வருந்தும்படி ஏளனமாக பேசினர். மேலும் அவரது மகள் அபராத தொகையை வசூலித்த பிறகே அவரது கார்  சாவியை வழங்கினர். சம்பவ இடத்தில் நடந்த விவரங்களை ரமணா சந்திரசேகர், தன் முகநூல் பதிவில் வேதனையுடன் வெளிப்படுத்தியிருந்தார். அது முகநூலில் வைரலாகப் பரவவே கடுமையாக நடந்துகொண்ட காவலர்கள் பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டனர்.அன்று போக்குவரத்துக் காவல்துறையின் மானம் வலைதளங்களில் கப்பலேறியது.

இந்நிலையில் ரமணா நன்கு உடல்நலம் தேறி மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதில் விஜய் நடிக்கவிருப்பதாகவும் ஒரு முன்னணி நாளிதழ், ரமணா மேல் உள்ள அக்கறையில் வெளியிட அதை பல இணையதளங்கள் வைரல் செய்தியாக்கினர். அச்செய்திகளை விஜய்க்கு ஏற்பட்ட தர்மசங்கடமாக உணர்ந்த இயக்குநர் ரமணா, இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் ”இது தவறான தகவல், நான் அந்த குறிப்பிட்ட நாளிதழிடமோ அல்லது நிருபரிடமோ இதுபோல எந்த தகவலையும் கூறவில்லை. மேலும், வேறு எந்த ஊடகத்திலும் இப்படி ஒரு தகவலை நான் பதிவிடவில்லை. அப்படி இருந்தும், என் மீது தனிப்பட்ட நலன் கொண்டஅந்த நாளிதழ்  இப்படி ஒரு தவறான செய்தியை வெளியிட்டுவிட்டது.இதனால், தளபதி விஜய்க்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கும் என்பதை நான் உணர்வேன். நான் படம் இயக்கும் முயற்சியில் இருப்பது உண்மை தான். ஆனால், அது விஜயை வைத்து அல்ல. அப்படி, காலமும், இயற்கையில் வழிவகை செய்தால், அதை நானே சொல்லியிருப்பேன்.” என்று வருத்தத்துடன் விளக்கம் அளித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்