
முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' உள்ளிட்ட அற்புதமான படங்களை இயக்கியவர், இயக்குனர் மகேந்திரன். தற்போது இவர் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்து, திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் இயக்குனராகவும் உயர்ந்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் மகேந்திரன்.
முத்தான திரைப்படங்களை இவர் தமிழ் திரையுலகிற்கு கொடுத்த போதிலும் 12 படங்களை மட்டுமே இயக்கினார். மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் மாஸ் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக, இவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.