
'தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம்' என்ற பட நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் “ முந்திரிக்காடு “ இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் மு.களஞ்சியம்.
இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படம் குறித்து இயக்குனர் களஞ்சியம் பேசுகையில், சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் வெளியிடக் கேட்டோம். எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்ததோடு அல்லாமல் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட ராசி ஏறக்குறைய இருபது லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். அதோடு இல்லாமல் உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆணவக் கொலை பற்றிய பதிவாக இந்த முந்திரிக்காடு இருக்கும். அதை மையப் படுத்தி அந்த போஸ்டர் வடிவமைக்கப் பட்டது.
விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்று இயக்குனர் மு.களஞ்சியம் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.