
உள்ளுக்குள் ஆயிரம் புகைச்சல்கள் இருந்தாலும் ‘சர்கார்’ படம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவும் மற்ற அ.தி.மு.க.வினரும் வெளிப்படையாக வெகுண்டெழுவது அரசு தந்த இலவசப் பொருட்களை தீயிட்டு எரிக்கும் காட்சிக்குத்தான். இந்தக் காட்சியில் இலவச மிக்ஸி ஒன்றை எரிக்கும் காட்சியில் நடித்திருந்தவர் சாட்சாத் இயக்குநர் முருகதாஸேதான். அடடே என்ன முகராசி பாருங்க.
முதல்நாள் வசூல் எதிர்பார்த்ததைவிட சற்று சிறப்பாகவே இருந்தநிலையில், காலையில் மெல்ல தியேட்டர் விசிட்டுகளுக்கு கிளம்பிபோயிருந்த முருகதாஸ் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பேட்டிக்குப்பின்னர் பயங்கர அப்செட். மீண்டும் போன்களை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி தலைமறைவாகிவிட்டாராம்.
எதிர்ப்புகள் பல்வேறு திசைகளிலிருந்தும் வலுத்துவரும் நிலையில் இன்று மாலை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் சந்தித்து அ.தி.மு.க.வின் எதிர்ப்பை எந்தமாதிரியாக சமாளிப்பது, பிரச்சினைகள் இன்னும் அதிகமானால் படத்தில் எந்தெந்த காட்சிகளை வெட்டுவது அல்லது அரசை துணிந்து எதிர்ப்பது என்பது குறித்து விவாதிக்கிறார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.