விஜய் மகன் டைரக்‌ஷன்ல நடிக்க நான் ரெடி.... ஆவலோடு காத்திருக்கு துருவ் விக்ரம் - ஓகே சொல்வாரா தளபதி?

Ganesh A   | Asianet News
Published : Feb 10, 2022, 05:38 AM IST
விஜய் மகன் டைரக்‌ஷன்ல நடிக்க நான் ரெடி.... ஆவலோடு காத்திருக்கு துருவ் விக்ரம் - ஓகே சொல்வாரா தளபதி?

சுருக்கம்

மகான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துருவ் விக்ரம் (Dhruv Vikram), நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) உடனான நட்பு குறித்து பேசியுள்ளார். 

நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' (adithya varma) படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' (Arjun Reddy) படத்தின் தமிழ் ரீமேக்காகும். 'ஆதித்ய வர்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ (mahaan) படத்தில் நடித்து முடித்துளார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம் இன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துருவ், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: “சின்ன வயசில் இருந்தே விஜய் (vijay) சாருடைய மகன் சஞ்சய் எனது நண்பன் தான். அவர் நல்ல கதையுடன் வந்தால், அவர் டைரக்‌ஷன்ல நடிக்க தயாராக இருக்கிறேன். பாலிவுட் மாதிரி இங்கும் இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது அமையும்” என துருவ் கூறி உள்ளார்.

மகான் படத்துக்கு பின்னர் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ் (Maari selvaraj) உடன் கூட்டணி அமைக்க உள்ளார் துருவ் விக்ரம். இப்படத்தில் அவர் கபடி வீரராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?