திடீரென 'சர்கார்' ஷூட்டிங் நடந்த இடத்தில் 'தர்பார்' ஷூட்டிங்கை நடத்திய ஏ.ஆர்.முருகதாஸ்...! என்னவாக இருக்கும்?

Published : Dec 04, 2019, 09:02 PM IST
திடீரென 'சர்கார்' ஷூட்டிங் நடந்த இடத்தில் 'தர்பார்' ஷூட்டிங்கை நடத்திய ஏ.ஆர்.முருகதாஸ்...! என்னவாக இருக்கும்?

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ரஜினிகாந்தின் 'தர்பார்' படம், வரும் பொங்கல் வெளியீடாக திரைக்குவரவுள்ளது. முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  

இந்த நிலையில், 'தர்பார்' படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு அருகே உள்ள மாதா மெடிக்கல் காலேஜில் திடீரென நடந்தேறியுள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளதன் மூலம் இது தெரியவந்துள்ளது. 

இதில், காக்கிச் சட்டையுடன் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் இருக்கும் ரஜினி, ரசிகர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்துகிறார். 
https://twitter.com/gunavivek/status/1201082221567676416


இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள், ஷுட்டிங்தான் முடிந்துவிட்டதாக சொன்னார்களே, பின்னர் ஏன் மீண்டும் யூனிஃபார்முடன் தலைவர் நடிக்கிறார் என சந்தேகம் அடைந்தனர். 

இதுகுறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, முழுக்க முழுக்க மும்பை மற்றும் வட மாநிலங்களில் படமாக்கப்பட்டு வந்த 'தர்பார்' படத்தின் சில பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே இங்கு ஷுட் செய்யப்பட்டதாகவும், படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
'சர்கார்' படத்தில், ஒவ்வொரு நோயாளியையும் காண்பித்து ஒவ்வொரு டிபார்ட்மென்ட் சரியாக இயங்கவில்லை என்பதை விஜய் சுட்டிக் காட்டும் காட்சி, மாதா மெடிக்கல் காலேஜில்தான் படமாக்கப்பட்டது.

தற்போது, அதே இடத்தில் ரஜினியின் தர்பார் பட பேட்ச் ஒர்க் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக கூட, அவர்களை பார்த்து ரஜினி கையசைத்து உற்சாகப்படுத்திய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
https://twitter.com/gowtham766/status/1201094330053623809


லைகா நிறுவனத்தின் மிகபிரம்மாமண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 'பேட்ட' படத்தை தொடர்ந்து, தர்பாருக்கும் ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!