ரஜினி தந்த ருத்ராட்சத்தை திருப்பி தரும் தனுஷ்..? பொண்ணே வேணாம்னுட்ட.. அதிர்ஷ்டம் மட்டும் வேணுமா?

Published : Jan 19, 2022, 05:50 PM IST
ரஜினி தந்த ருத்ராட்சத்தை திருப்பி தரும் தனுஷ்..? பொண்ணே வேணாம்னுட்ட.. அதிர்ஷ்டம் மட்டும் வேணுமா?

சுருக்கம்

அந்த ருத்ராட்சம் அவரிடம் சேர்ந்த பிறகுதான் அவருடைய ராசி ரொம்ப பெரிய உச்சதை தொட்டது! அவ்வளவு அதிர்ஷ்டகார ருத்ராட்சம்! என்று இரண்டு குடும்பத்திலும் ஒரு பேச்சு உண்டு

ரஜினி மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் ‘பிரிகிறோம்’ என்று அறிவித்தது அடங்காத அதிர்வலையை உருவாக்கியுள்ளது. பிரிவுக்கு உண்மையான காரணம் என்னவாக இருந்தாலும், தனுஷ் எந்த சூழலிலும் ஐஸ்வர்யாவை விட்டுக் கொடுக்கவே கூடாது! ஏனென்றால் அவர் ரஜினியின் மகள், இந்தியாவே கொண்டாடும் ஒரு மனிதரின் மனதை தனுஷ் காயப்படுத்த கூடாது. ஐஸ்வர்யாவை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! என்று தாறுமாறாக இதில் ரசிகர்களின் பஞ்சாயத்துகளும், தீர்ப்புகளும் ஓடிக் கொண்டுள்ளன.

ஆனால் தனுஷ் தரப்போ ‘இது ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம். இதை ரஜினி பொண்ணு, நடிகர் தனுஷ் வாழ்க்கைன்னு பார்க்காதீங்க. சாதாரண தம்பதிகளா எங்களையும் நினையுங்க. தமிழ்நாட்டுல மட்டும் தினம் தினம் பல நூறு விவாகரத்து வழக்குகள் கோர்ட்டுக்கு வருது. அதை மாதிரியானதா எங்களையும் நினையுங்க. ரஜினி மகள்னாலும், தேசிய விருது வாங்கிய தனுஷ்னாலும் மனசுன்னு ஒண்ணு இருக்குது, வலிகள் இருக்குது. அதை புரிஞ்சுக்கோங்க. எங்களை செலிபிரெட்டியா பார்க்காமல், சாதாரண சிட்டிசனா பாருங்க.’ என்கிறார்கள்.

இதையே திருப்பி கேட்கும் விமர்சகர்கள் ’இத்தனை நாளா இந்த எளிமை எங்கே போச்சு தனுஷ்?’ என்கின்றனர்.

தனுஷிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, தனது பொருட்கள் யாவற்றையும் எடுத்து தன் அப்பா வீட்டுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் மகன்களின் நிலை என்னவாகும்? என்பதுதான் கேள்வியே. குறிப்பாக ரஜினியை புரட்டி எடுக்கும் விஷயமே அதுதான். செளந்தர்யா விவாகரத்து செய்த போது கூட அவரது மகன் வேத் மிக சிறிய பையன், விபரமே தெரியாது. ஆனால், ஐஸ்வர்யா விஷயத்தில் நிலைமை தலைகீழ். லிங்கா, யாத்ரா இருவருமே நன்கு விபரமறிந்த பசங்க. இதுதான் பெரிய வருத்தமாக உள்ளது ரஜினிக்கு.

இது இப்படியிருக்க, தன் மருமகன் தனுஷுக்கு அற்புதமான ருத்ராட்சம் ஒன்றை வழங்கியிருந்தார் ரஜினி. அதை பெருமையாக எல்லோரிடமும் காட்டி, தன் கழுத்தில் தொங்கவிட்டிருக்கிறார் தனுஷ். அந்த ருத்ராட்சம் அவரிடம் சேர்ந்த பிறகுதான் அவருடைய ராசி ரொம்ப பெரிய உச்சதை தொட்டது! அவ்வளவு அதிர்ஷ்டகார ருத்ராட்சம்! என்று இரண்டு குடும்பத்திலும் ஒரு பேச்சு உண்டு.

இந்நிலையில், அந்த ருத்ராட்சத்தை தனுஷ் திருப்பி ஒப்படைப்பாரா ரஜினியிடம்? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. “சாரோட பொண்ணையே வேண்டாமுன்னு சொல்லிட்டியே பா. அந்த ருத்ராட்சம் மட்டும் எதுக்கு! திருப்பி கொடுத்துடுப்பா” என்று ரஜினியின் நண்பர்களான சில சீனியர் மனிதர்கள், தனுஷின் கவனத்துக்கு போகும் வகையில் அவரது குடும்பத்தினரிடம் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?