
Dhanush Should Get National Award For Kuberaa : தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பன்முகம் வாய்ந்தவராக திகழ்கிறார். கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் உருவான குபேரா படம் வெளியானது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான குபேரா படம் கடந்த 20ஆம் தேதி திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை சந்தித்தது. எனினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பேன் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் குவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் சேகர் கம்முலா தான். அவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்தப் படமும் அதே டிராக்கில் வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
ஒரு பிச்சைக்காரன் பணக்காரனாகும் போது நடக்கும் சம்பவங்களும், பணம், பேராசை இதற்கிடைப்பட்ட கதைகளையும் இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. ஆக்ஷனுக்கு மத்தியில் படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளும் கூடவே ஆன்மீக காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இது இயக்குநரின் பிளானாக கூட இருக்கலாம். கிளைமேக்ஸில் சென் டிமெண்ட் காட்சிகளை வைத்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார் இயக்குநர் சேகர் கம்முலா.
ஒரு பிச்சைக்காரனாக வரும் தனுஷின் கதாபாத்திரமும் வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிச்சைக்கார கதாபாத்திரம் குறித்து கூட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கருத்து தெரிவித்திருந்தார். அப்படியொரு கதாபாத்திரத்தில் என்னை நடிக்க சொல்லியிருந்தால் நான் முடியாது என்று சொல்லியிருப்பேன் என்றார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்றால் தேசிய விருதுக்கே அர்த்தம் இல்லை என்பது போன்று பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் இப்போது குபேரா படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் கூட தனுஷைப் பற்றியும், கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பிச்சைக்காரன் கதாபாத்திரம் ஏற்று நடித்ததே மிகப்பெரிய வெற்றி தான். இந்தப் படத்திற்காக தனுஷ் தேசிய விருது பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இதற்கு முன்னதாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் எனறு வாழ்த்து கூறியிருந்தேன். இப்போது தனுஷ் படத்திற்கு வாழ்த்து கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாளில் ரூ.14.75 கோடி வசூலித்த இந்த திரைப்படம், இரண்டாவது நாளில் ரூ.16.5 கோடி, மூன்றாவது நாளில் ரூ.17.35 கோடி, நான்காவது நாளில் ரூ.6.85 கோடி, ஐந்தாவது நாளில் ரூ.5.31 கோடியை வசூலித்துள்ளது. ஐந்து நாள் முடிவில் மொத்தம் ரூ.60.71 கோடியை ‘குபேரா’ திரைப்படம் வசூலித்துள்ளது. இதில் 70% வசூல் தெலுங்கு மொழியில் இருந்து கிடைத்துள்ளது. தெலுங்கில் முதல் நாள் ரூ.10 கோடியும், இரண்டாவது நாள் ரூ.11.5 கோடியும், மூன்றாவது நாள் ரூ.12.4 கோடியும், நான்காவது நாள் ரூ.4.95 கோடியும், ஐந்தாவது நாள் ரூ.3.77 கோடியும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ.4.5 கோடி, இரண்டாவது நாள் ரூ.4.65 கோடி, மூன்றாவது நாள் ரூ.4.5 கோடி, நான்காவது நாள் ரூ.1.6 கோடி, ஐந்தாவது நாள் ரூ.1.31 கோடியும் வசூல் ஆகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.