தனுஷ் பட வில்லன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் திரையுலகம்...!

Published : Apr 15, 2021, 07:16 PM IST
தனுஷ் பட வில்லன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் திரையுலகம்...!

சுருக்கம்

இந்நிலையில் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

 இரண்டாவது முறையாக தன்னுடைய  கோரத்தாண்டவத்தை துவங்கியுள்ள கொரோனாவின் பிடியில் இதுவரை, ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட், மாதவன், அக்‌ஷய் குமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கௌரி கிஷன், என அடுத்தடுத்து பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போது மலையாள திரையுலகில் பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் டொவினோ தாமஸ், 2018ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்த லூசிபர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்தார். 

பன்மொழியில் உருவாகி உள்ள மின்னல் முரளி படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தொற்று உறுதியாகியுள்ளது என பதிவிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Udhayanidhi-Trisha : உதயநிதி படத்தில் நடிக்க மறுத்தாரா திரிஷா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?
Udhayanidhi Stalin: உதயநிதி கைதான உடனே 'அந்த' நடிகை போட்ட ட்வீட்.. 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா?