'டைரக்‌ஷன் யோசனையைக் கைகழுவினார் தனுஷ்... காரணம் இவர்தான்...

By vinoth kumarFirst Published Dec 27, 2018, 9:17 AM IST
Highlights

நடிகராக  தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் தனுஷ், தயாரிப்பாளராகவும் சில வெற்றிகளை கொடுத்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருபவர், தற்போது வரிசையாக 5 இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்கும் ‘அசுரன்’ படத்துக்கு உடனடியாக கால்ஷீட் கேட்டதால் நடுவில் ஒரு படம் இயக்கும் திட்டத்தைக் கைவிட்டார் தனுஷ். இதனால் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நடிகராக  தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் தனுஷ், தயாரிப்பாளராகவும் சில வெற்றிகளை கொடுத்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருபவர், தற்போது வரிசையாக 5 இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

 நடிப்பது, தயாரிப்பது என்றில்லாமல் படங்களை இயக்கவும் செய்யும் தனுஷ், தான் இயக்கிய முதல் படமான பவர் பாண்டியை  மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுத்தார். அதை தொடர்ந்து இரண்டாவதாக தான் இயக்கும் படத்தை பிரம்மாண்டமாக இயக்க முடிவு செய்தவர், அதை பீரியட் படமாக எடுக்க நினைத்தார். அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில், ரசிகர்களிடமும், சினிமாக்காரர்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

 இந்த நிலையில், தனுஷ் இயக்கும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், படத்தை முழுவதுமாக டிராப் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னொரு பக்கம் திடீரென ‘அசுரன்’ ஸ்கிரிப்டுடன் வெற்றிமாறன் படம் இயக்க உடனே தயாரானதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

click me!