'தர்பார்' எச்.டி பிரிண்ட் படத்தை வெளியிட்ட மர்ம நபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தை சேர்த்தவர்கள் பரபரப்பு புகார்!

By manimegalai aFirst Published Jan 11, 2020, 4:22 PM IST
Highlights

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி  9 ஆம் தேதி வெளியான 'தர்பார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கலெக்ஷனுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி, நல்ல படியாக திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் எச்.டி பிரிண்ட் பட ஃபைலை ஷார் செய்து, அனைவருக்கும் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி வருகிறார்.

அதில், யாரும் 'தர்பார்' படத்தை திரையில் சென்று பார்க்க கூடாது என்கிற நோக்கத்தில் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், வேப்பேரியில் உள்ள கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரில், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் 'தர்பார்' படத்தின் எச்.டி. பதிவு திரைப்படம் பரவி வருவதால், ரசிகர்கள் பலர் திரையரங்கம் செல்வதை தவிர்த்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் ஆகவே, உடனடியா இந்த செயலில் ஈடுபடும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.   

click me!